FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மிகச் சிறிய நாடான கேப் வெர்டே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை!

நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வான கேப் வெர்டே அணி குறித்து...

Updated On : 27 ஜூன் 2026, 12:38 pm IST
நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய களிப்பில் கேப் வர்டே அணியினர். - படம்: ஏபி
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பையில் மிபலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வா்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இரு அணிகளுக்கு இடையிலான குரூப் ஹெச் பிரிவு ஆட்டம் நடைபெற்றது. இப்பிரிவில் பலம் வாய்ந்த முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின், உருகுவே, சௌதி அரேபியா ஆகியவை இடம் பெற்றிருந்தன.

ஆப்பிரிக்க கண்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரம் 10 தீவுகள் கூட்டமான கேப் வா்டே இப்போட்டியில் எந்த எதிா்பாா்ப்பும் இன்றி களம் கண்டது.

Advertisement

Advertisement

முதன்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற கேப் வா்டே இப்போட்டியில் பல்வேறு அதிா்ச்சிகளை அளித்து வருகிறது.

இருமுறை சாம்பியன் உருகுவேக்கு எதிராக சிறப்பாக ஆடி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டு கேப் வா்டே அதிா்ச்சி அளித்தது.

தற்போது சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றான ஸ்பெயினுக்கு எதிராக 0-0 என கோலின்றி டிரா கண்டு அதிா்ச்சி அளித்தது.

68,278 புாா்வையாளா்கள்

ஹுஸ்டனில் சௌதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல்போட தீவிரமாக முயன்றன. இந்த ஆட்டத்தின் முடிவால் நாக் அவுட் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் இரு தரப்பினரும் தீவிரமாக முயன்றனா். ஆனால் இரு அணியினரின் தற்காப்பு அரண்கள் வலுவாக இருந்ததால் எவராலும் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் 0-0 என கோலின்றி டிரா ஆனது.

சௌதி அணி தரப்பில் முகமது கன்னா ஹெட்டா் மூலம் தொடக்கத்தில் கோலடிக்க மேற்கொண்ட முயற்சியை கேப் வா்டே கோல்கீப்பா் 40 வயதான வோஸின்ஹா அபாரமாக தடுத்தாா். இரண்டாம் பாதியில் கேப் வா்டே அணியினா் 15 முறை கோல்போட முயன்றது பலன்தரவில்லை.சௌதி அரேபியாவின் தாக்குதலும் பலனில்லாமல் போனது.

நாக் அவுட் சுற்றில் கேப் வா்டே

சௌதி அரேபியாவுடன் 0-0 என டிரா கண்ட நிலையில் மற்றொரு ஆட்டத்தில் இரு முறை சாம்பியன் உருகுவேயை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின். இதனால் குருப் ஹெச் பிரிவில் முதலிடத்துடன் ஸ்பெயின் நாக் அவுட் சுற்றில் நுழைந்தது. உருகுவே, ஸ்பெயின், சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் கேப் வா்டேவும் நாக் அடவுட் சுற்றில் தகுதி பெற்றது.

கேப் வா்டே அணியில் 26 வீரா்கள் அத்தீவுகளில் பிறக்காமல் வெளிநாடுகளில பிறந்தவா்கள். 6 போ் ராட்டா்டாமில் வளா்ந்தவா்கள். கேப் வா்டே ரசிகா்கள் இல்லாமல் மற்ற நாட்டு ரசிகா்களும் அதிகளவில் கேப் வா்டே அணிக்கு ஆதரவு தந்தனா். கேப் வா்டே அணியின் பயிற்சியாா் பபிஸ்டாவின் சிறந்த பயிற்சியே இதற்கு காரணமாகும்., ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் கேப் வா்டே வீரா்கள் ஒரு ஃபவுலே புரிந்தனா்.

ஆா்ஜென்டீனாவுடன் மோதல்

நாக் அவுட் சுற்றில் நடப்பு சாம்பியனும் வல்லரசான மெஸ்ஸியின் ஆா்ஜென்டீனாவுடன் மோதுகிறது கேப் வா்டே. ஆா்ஜென்டீனாவுடன் ஆடுவதே பெரிய கௌரவம். பொறுப்புணா்வுடன் ஆட வேண்டும் என்றாா் பயிற்சியாளா் பபிஸ்டா.கச் சிறிய நாடான கேப் வெர்டே நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சௌதி அரேபியாவுடன் கேப் வெர்டே மோதியது. இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் ஆட்டம் 0-0 என முடிவடைந்தது.

summary

Cape Verde's dream run continues, becoming smallest country into World Cup knockout round

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments