கோல் அடிக்காததால் சமனில் முடித்த போர்ச்சுகல்..! முதலிடத்தைப் பிடித்தது கொலம்பியா!
சமனில் முடிவடைந்த போர்ச்சுகல் - கொலம்பியா ஆட்டம் குறித்து...
அமெரிக்காவின் இன்டர் மியாமி திடலில் நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் - கொலம்பியா மோதின. இந்தப் போட்டி சமனில் முடிவடைந்தது.
கொலம்பியா தனது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது. கடைசி நிமிஷத்தில் அடித்த கோல் ஆஃப்சைடு விதியால் நீக்கப்பட்டது. இருப்பினும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியது.
கொலம்பியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் போர்ச்சுகல் மிகவும் சுமாராகவே விளையாடியது. 51 சதவிகித பந்தை கொலம்பியா தன்வசமே வைத்திருந்தது.
Advertisement
Advertisement
கொலம்பியா 7 முறை இலக்கை நோக்கி அடிக்க, போர்ச்சுகல் 2 முறை மட்டுமே அடித்தது. மொத்த ஷாட்டுகளில் போர்ச்சுகல் 13ஆக இருக்க, கொலம்பியா 24ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்குக் கிடைத்த வாய்ப்பினை கோலாக மாற்றத் தவறவிட்டார். இந்தப் போட்டியைப் பார்க்க 64, 478 பேர் கலந்துகொண்டனர்.
போர்ச்சுகல் அணி குரூப் கேவில் இரண்டாமிடம் பிடித்தது. கொலம்பியா முதலிடம் பிடித்து அசத்தியது.
Colombia wins Group K after 0-0 draw with Portugal; both squads already into World Cup knockouts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.