முகப்பு
செய்திகள்

95-வது நிமிடத்தில் அடித்த கோல்: ஜப்பானை நாக் - அவுட் செய்த பிரேசில்!

நாக் - அவுட் சுற்றில் ஜப்பானை வீழ்த்திய பிரேசில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Updated On : 30 ஜூன் 2026, 11:44 am IST
வெற்றியைக் கொண்டாடும் பிரேசில் வீரர்கள்
பகிர்:

நாக் - அவுட் சுற்றில் 2 - 1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்திய பிரேசில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப் போட்டிகள் முடிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் நாக்-அவுட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் விளையாடும் இந்தச் சுற்றில் விளையாடுகின்றன. இதில், தேர்வாகும் 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்தச் சுற்றின் 2-வது போட்டி பிரேசில் - ஜப்பான் இடையே ஹோஸ்டான் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

Advertisement

Advertisement

ஆட்டம் தொடங்கி 29-வது நிமிடத்தில் 5 முறை உலக சாம்பியனான பிரேசிலை ஜப்பான் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜப்பான் வீரர் கைஷூ சனோ களத்தின் நடுவில் மெதுவாக வந்த பந்தை இடைமறித்து, தனியாளாக ஓடி பிரேசில் கோல்கீப்பர் அலிசனைக் கடந்து கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் கோலடிக்க முயன்ற பிரேசிலை ஜப்பான் முடிந்த வரை தடுத்து ஆட்டம் காட்டியது.

இரண்டாம் பாதியில் கோல் அடிக்க வேண்டிய அழுத்தத்துடன் பிரேசில் களமிறங்கியது. 56-வது நிமிடத்தில் நடுக்கள வீரரான காசெமிரோ, கேப்ரியல் மாகல்ஹேஸ் க்ராஸ் ஆக அடித்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார். இதன்மூலம், ஆட்டம் 1–1 என சமனானது.

ஜப்பான் கோல்கீப்பர் சியோன் சுசூகி பிரேசிலின் அதிரடி ஆட்டத்தை சிறப்பாகக் கையாண்டார். பல முக்கிய ஷாட்களைத் தடுத்த அவர், பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் அடித்த ஷாட்டை விரல் நுனியால் தடுத்து கோல் கம்பத்தில் பட்டு விலகச் செய்து அசத்தினார்.

பிரேசில் கோலை தடுக்கும் ஜப்பான் கோல்கீப்பர் சியோன் சுசூகி

ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது ஸ்டாப்பேஜ் நேரத்தின் 5-வது நிமிடத்தில் ஜப்பான் அணி பெனால்டி பாக்ஸ் வெளியே எளிதாக பந்தை இழந்தது. பிரேசில் வீரர் ப்ரூனோ குய்மரேஸ் இரண்டாம் பாதியில் களத்திற்கு வந்த கேப்ரியல் மார்டினெல்லியிடம் உடனடியாக பந்தை பாஸ் செய்தார். அவர் அந்தப் பந்தை லாவகமாக சுசூகியைத் தாண்டி கோலாக்கி 95-வது நிமிடத்தில் பிரேசிலை வெற்றிபெறச் செய்தார்.

அதிரடியான அட்டத்தின் மூலம் 2-1 என்கிற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பிரேசில் முன்னேறியது.

அடுத்ததாக, ஜூலை 5 அன்று நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கோட் டிவார் அல்லது நார்வே அணியை பிரேசில் எதிர்கொள்ளும்.

summary

Brazil defeated Japan in the knockout round and advanced to the next round.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments