இத்தாலி கோப்பையை வென்ற இன்டர் மிலன்..! 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டைச் சாம்பியன்!
இத்தாலி கோப்பையை 10ஆவது முறையாக வென்ற இன்டர் மிலன் அணி குறித்து...
இத்தாலியில் நடைபெறும் இத்தாலி கோப்பை இறுதிப் போட்டியில் 2-0 என வென்று இன்டர் மிலன் கோப்பையை கைப்பற்றியது. இது இந்த அணிக்கு 10ஆவது இத்தாலி கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியன் கால்பந்து லீக் சீரி ஏவில் (இத்தாலி சாம்பியன்ஷிப்) முதலிடம் பிடித்த இன்டர் மிலன் அணிக்கு இந்த சீசனில் இரட்டைச் சாம்பியன் என்பது ரசிகர்களிடம் கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் லாசியோ - இன்டர் மிலன் மோதின. இதில் 2-0 என இன்டர் மிலன் வென்றது. இந்தப் போட்டியில் 14ஆவது நிமிஷத்தில் ஒரு ஓன் கோல், 35ஆவது நிமிஷத்தில் லொடாரோ மார்டினெஷ் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
Advertisement
Advertisement
இத்தாலியில் மிகவும் புகழ்பெற்ற கால்பந்துப் போட்டிகளான சீரிஸ் ஏ, இத்தாலி கோப்பை ஆகிய இரண்டையும் இன்டர் மிலன் அணி தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த இரட்டைச் சாம்பியன் என்ற அந்தஸ்தை சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்டர் மிலன் அணி அடைந்துள்ளது. ஜோஸ் மொரிங்கோ தலைமையில் இன்டர் மிலன் 2010 சீசனில் சாம்பியன்ஸ் லீக், சீரிஸ் ஏ (இத்தாலி சாம்பியன்ஷிப்), இத்தாலி கோப்பையை வென்றிருந்தது.
Inter Milan seals a long-awaited double with a 2-0 Italian Cup win over Lazio
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.