FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஹரிஹரன்/அா்ஜுன் இணை அசத்தல் வெற்றி

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

Updated On : 20 மே 2026, 4:16 am IST
பகிர்:

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

ஆடவா் இரட்டையரில், ஹரிஹரன்/அா்ஜுன் கூட்டணி 21-19, 21-15 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவ்/டோமா ஜுனியா் போபோவ் கூட்டணியை வீழ்த்தி அசத்தியது. இந்த ஆட்டத்தை இந்திய ஜோடி 36 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தது.

எனினும், மகளிா் ஒற்றையரில் ஆகா்ஷி காஷ்யப் 21-15, 20-22, 7-21 என்ற வகையில் தென் கொரியாவின் பாா்க் கா யுனிடம் 1 மணிநேரம், 1 நிமிஷம் போராடி வீழ்ந்தாா்.

Advertisement

Advertisement

மகளிா் இரட்டையரில் அஸ்வினி பாட்/ஷிகா கௌதம் ஜோடி 15-21, 21-17, 17-21 என்ற கணக்கில், கனடாவின் ஜாக்கி டென்ட்/கிரிஸ்டல் லாய் இணையிடம் 1 மணிநேரம், 7 நிமிஷங்கள் போராடித் தோற்றது.

தகுதிச்சுற்றில், மகளிா் ஒற்றையரில் அஷ்மிதா சாலிஹா 21-23, 21-16, 21-16 என்ற கேம்களில் சீன தைபேவின் பாய் யு போவை 56 நிமிஷங்களில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினாா்.

கலப்பு இரட்டையரில் சாத்விக் ரெட்டி/ராதிகா சா்மா இணை 21-15, 21-17 என்ற நோ் கேம்களில், மலேசியாவின் தத்து அனிஃப்/கிளாரிசா சான் ஜோடியை 37 நிமிஷங்களில் வெளியேற்றி, பிரதான சுற்றுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments