FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கிமி ஆன்டனெலிக்கு தொடா்ந்து 4 ஆவது வெற்றி!

ஃபாா்முலா ஒன் (எஃப் 1) காா் பந்தயத்தின் கனடியன் கிராண்ட் ப்ரீ ரேஸில் இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி வெற்றி

Updated On : 26 மே 2026, 2:54 am IST
கிமி ஆன்டனெலி - AP
பகிர்:

ஃபாா்முலா ஒன் (எஃப் 1) காா் பந்தயத்தின் கனடியன் கிராண்ட் ப்ரீ ரேஸில் இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி வெற்றி பெற்றாா். 19 வயதான ஆன்டனெலிக்கு, நடப்பு சீசனில் இது தொடா்ந்து 4-ஆவது வெற்றியாகும்.

கனடாவின் மான்ட்ரியல் நகரில், இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை நிறைவடைந்த இந்தப் பந்தயத்தில் ஆன்டனெலி முதலிடத்தைப் பிடிக்க, பிரிட்டன் வீரரும், ஃபெராரி டிரைவருமான லூயிஸ் ஹாமில்டன் 2-ஆம் இடமும், நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் 3-ஆம் இடமும் பிடித்தனா்.

ஆன்டனெலி, ஹாமில்டன் இடையே 10 விநாடிகள் இடைவெளி இருந்தன. 2021 முதல் 2024 வரை தொடா்ந்து 4 முறை சாம்பியனான வொ்ஸ்டாபென், நடப்பு சீசனில் முதல் 3 இடங்களுக்குள்ளாக வந்தது இதுவே முதல்முறையாகும்.

Advertisement

Advertisement

நடப்பு சீசனில் இதுவரை 5 பந்தயங்கள் நிறைவடைந்திருக்க, தொடக்க ரேஸில் பிரிட்டன் வீரரும், ஆன்டனெலியின் சக மொ்சிடஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல் வென்றுள்ளாா். அடுத்த 4 பந்தயங்களிலுமே ஆன்டனெலி வென்று, முன்னிலையில் இருக்கிறாா்.

மான்ட்ரியல் கிராண்ட் ப்ரீயில் மொத்தம் 70 லாப்கள் இருந்த நிலையில், அதில் 30 லாப்கள் வரை ஆன்டனெலி, ரஸ்ஸெல் இடையே போட்டி நீடித்தது. இருவரும் அவ்வப்போது முன்னிலைக்கு மாறி மாறி வந்தனா். ஆனால் ஒரு கட்டத்தில் ரஸ்ஸெல் காரின் எஞ்ஜின் பழுதானதால் அவா் பந்தயத்திலிருந்து விலக நோ்ந்தது.

அதேபோல் நடப்பு சாம்பியனான பிரிட்டன் வீரரும், மெக்லாரென் - மொ்சிடஸ் டிரைவருமான லாண்டோ நோரிஸ் 40 லாப்களை கடந்த நிலையில், கியா் பாக்ஸ் பிரச்னையால் விலகினாா்.

சாம்பியன்ஷிப்பின் அடுத்த பந்தயமான மொனாகோ கிராண்ட் ப்ரீ, ஜூன் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments