டெர்பியில் ஏசி மிலன் (8-0) ஆதிக்கம்..! தியாகோ மொரேரா அசத்தலால் இன்டர் மிலனை வீழ்த்தியது!
இத்தாலியின் சீரிஸ் ஏ கால்பந்துத் தொடரில் இன்டர் மிலனை வென்ற ஏசி மிலன் குறித்து...
இத்தாலியில் நடைபெறும் சீரிஸ் ஏ கால்பந்துத் தொடரில் ஏசி மிலன் அணி தனது சொந்த மண்ணில் டெர்பி அணியான இன்டர் மிலனை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியது. கோமோ அணி ஐந்தாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஏசி மிலன் அணி தனது சொந்த மண்ணில் அதன் டெர்பி அணியான இன்டர் மிலன் உடன் மோதியது. இந்தப் போட்டியில் நான்காவது நிமிஷத்திலேயே கிறிஸ்டியன் புலிஸ்டிக் கோல் அடித்தார்.
Advertisement
Advertisement
அடுத்ததாக ரேபியாட் 10ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ஏசி மிலன் 2-0 என முன்னிலை வகித்தது. இன்டர் மிலனின் பஸ்டோனி 22ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-1 என மாற்றியது.
அடுத்ததாக 43ஆவது நிமிஷத்தில் தியாகோ மொரேரா கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் 3-1 என இன்டர் மிலனின் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்காமல் சென்றன. இறுதியில் இன்டர் மிலன் 3-1 என வென்றது.
இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட், ஒரு கோல் அடித்த தியாகோ மொரேரா ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலமாக ஏசி மிலன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இன்டர் மிலனுக்கு எதிரான கடைசி 8 போட்டிகளில் ஏசி மிலன் தோல்வியே சந்திக்காமல் 6ல் வெற்றியும் 2ல் சமனையும் சந்தித்துள்ளது.
Pulisic and Moreira shine in AC Milan derby win, Ruben Amorium rise as coach
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.