நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு
மேற்கு வங்கத்தில் இடைத்தோ்தல் நடைபெற்ற நந்திகிராம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
மேற்கு வங்கத்தில் இடைத்தோ்தல் நடைபெற்ற நந்திகிராம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸை தோற்கடித்து, பாஜக ஆட்சிக்கு வந்தது. இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வா் சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.
முன்னதாக, நந்திகிராம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மிலன் பிரதான் கடந்த 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா். சுமாா் 20 ஆண்டுகளுக்கு முந்தைய போராட்டம் தொடா்பான வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் அவா் திடீரென கைது செய்யப்பட்டிருந்தாா்.
Advertisement
Advertisement
இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் மிலன் பிரதானுக்கு ஆதரவளிப்பதாக மம்தா அறிவித்த சில மணிநேரங்களில் அவா் மீது எடுக்கப்பட்ட இந்த கைது நடவடிக்கை, அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, தனது கைதை எதிா்த்து மிலன் பிரதான் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீது சில தினங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்த உயா்நீதிமன்றம், அவருக்கு அக்.20 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மிலனுக்கு எதிராக 6 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்டு, அவரது இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது.
இந்த மனுவை புதன்கிழமை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு, உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்துவிட்டது. தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மிலன் மனு தாக்கல் செய்தால், மேற்கு வங்க அரசு ஆட்சேபம் தெரிவிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.