கால்பந்து போட்டியின்போது மைதானத்தின் நடுவே உயிரிழந்த வீரர்!
ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியின்போது மைதானத்தின் நடுவிலேயே வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியின்போது மைதானத்தின் நடுவிலேயே வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்பெயினில் நடைபெற்ற இரண்டாது டிவிஷன் அளவிலான கால்பந்துப் போட்டியில், எஃப்சி அன்டோரா - டெனரிஃப் அணிகள் மோதின.
2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் இருந்தபோது, போட்டியின் இறுதிக் கட்டத்தில் டெனரிஃப் அணியின் முன்கள வீரர் ஜீசஸ் டி மிகுவல் பந்தை விரட்டிக் கொண்டு வேகமாக ஓடினார்.
Advertisement
Advertisement
எதிரணியின் கோல்கீப்பரான ஜீசஸ் ஓவோனோவால் பந்தைத் தடுக்க மைதானத்தின் நடுப்பகுதிக்கு ஓடிவந்த நிலையில், இருவரும் அதிவேகமாக மோதியதில் ஜீசஸ் டி மிகுவல் மயங்கி விழுந்தார்.
கோல்கீப்பரின் செய்கைக்கு ஃபவுல் வழங்கப்பட்ட நிலையில், கீழே விழுந்த வீரரை எழுப்ப சக வீரர்கள் முயற்சித்த போது, அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மருத்துவர்கள் உடனடியாக அவரைப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறினர்.
உயிரிழந்த வீரர் டி மிகுவல், 2025-ல் ஸ்பெயினில் உள்ள காஸ்டெல்லோன் அணியிலிருந்து டெனரிஃப் அணிக்கு மாறியதாகக் கூறப்படுகிறது.
உலகின் பிரபல கால்பந்து அணிகளான ரியல் மாட்ரிட், பார்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் ஸ்பெயினில் உள்ள பிற கிளப் அணிகள் உள்பட பல வீரர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
A player died on the pitch during a football match held in Spain.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.