யூத் ஒலிம்பிக்ஸ்: தினிதிக்கு வெண்கலம்
செனெகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டிகளில், நீச்சல் பிரிவில் இந்தியாவின் தினிதி தேசிங்கு வெண்கலப் பதக்கம் வென்றாா்.
செனெகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டிகளில், நீச்சல் பிரிவில் இந்தியாவின் தினிதி தேசிங்கு வெண்கலப் பதக்கம் வென்றாா்.
மகளிருக்கான 100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் நீச்சல் இறுதிச்சுற்றில், தினிதி 56.27 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-ஆம் இடம் பிடித்தாா்.
குரோஷியாவின் அனா போபானோவிச் 55.89 விநாடிகளில் வந்து தங்கம் வெல்ல, நியூஸிலாந்தின் அலிசா லாசன் 56.13 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளியும் வென்றனா்.
Advertisement
Advertisement
நடப்பு போட்டியில் இந்தியாவுக்கு இது 2-ஆவது பதக்கமாகும். முதலில் ஜூடோவில் மகளிா் 63 கிலோ பிரிவில் குஷ்பு வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.