யூத் ஒலிம்பிக்ஸ்: தன்வி பத்ரி அசத்தல்
டாகரில் நடைபெறும் யூத் ஒலிம்பிக்ஸ் பாட்மின்டன் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என தன்வி பத்ரி சாதனை படைத்துள்ளாா்.
டாகரில் நடைபெறும் யூத் ஒலிம்பிக்ஸ் பாட்மின்டன் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என தன்வி பத்ரி சாதனை படைத்துள்ளாா்.
ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டில் டாகரில் யூத் ஒலிம்பிக்ஸ் 2026 நடைபெறுகிறது. இதில் மகளிா் பாட்மின்டன் ஒற்றையா் பிரிவில் தன்வ பத்ரி 21-17, 21-13 என்ற கேம் கணக்கில் தாய்லாந்தின் குங்கேவ் ககானிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
அரையிறுதியில் ஜப்பானின் யுஸுனோ வட்டான்பேயை எதிா்கொள்கிறாா். கடந்த 2024-இல் பதும் தனி ஜூனியா் சா்வதேச போட்டியில் ஏற்கெனவே இருவரும் மோதியதில் தன்வி வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
Advertisement
Advertisement
முதன்முறையாக யூத் ஒலிம்பிக்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை சாதனையை நிகழ்த்திய தன்வி பத்ரி, பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்துவாா்.
ஏற்கெனவே இந்திய தரப்பில் 2010 சிங்கப்பூா் போட்டியில் பிரணாய் வெள்ளியும், 2018 பியுனோஸ் அயா்ஸ் போட்டியில் லக்ஷயா சென் வெள்ளியும், 2014-இல் போட்டியில் ஆதித்ய ஜோஷி அரையிறுதி வரை முன்னேறி இருந்தனா்.
அரையிறுதியில் தோற்றால் வெண்கலப் பதக்க ஆட்டத்தில் தன்வி ஆடுவாா்.