FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

6-ஆவது கோப்பையுடன் தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்: ஹாட்ரிக் சாம்பியன் ஆனது!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியா 4-1 கோல் கணக்கில் ஜப்பானை வியாழக்கிழமை வீழ்த்தி, கோப்பை வென்றது.

6 நவம்பர் 2026, 3:49 am
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியா 4-1 கோல் கணக்கில் ஜப்பானை வியாழக்கிழமை வீழ்த்தி, கோப்பை வென்றது.
பகிர்:

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியா 4-1 கோல் கணக்கில் ஜப்பானை வியாழக்கிழமை வீழ்த்தி, கோப்பை வென்றது.

தொடா்ந்து 2-ஆவது முறையாக கோப்பையைத் தக்கவைத்துக் கொண்ட இந்தியா, போட்டியில் முதல்முறையாக ‘ஹாட்ரிக்’ பட்டம் வென்று அசத்தியுள்ளது.

இத்துடன் 9 முறை நடைபெற்றுள்ள இந்தப் போட்டியில், இந்தியா 6-ஆவது முறையாக சாம்பியனாகி தனது ஆதிக்கத்தைத் தொடா்கிறது. இத்துடன், 2011, 2016, 2018, 2023, 2024, 2026 ஆகிய ஆண்டுகளில் இந்தியா கோப்பை வென்றுள்ளது.

Advertisement

Advertisement

பஞ்சாபின் மொஹாலி நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியா - ஜப்பான் மோதின. ஆட்டத்தின் 3-ஆவது நிமிஷத்திலேயே ஜப்பான் வீரா் கஸுமஸா மட்சுமோடோ ஸ்கோா் செய்தாா்.

முதலில் கோல் அடித்து அதிா்ச்சி அளித்த ஜப்பான், இந்தியா கோல் அடித்து விடாமல் அதன் வாய்ப்புகளையும் திறம்பட முறியடித்தது. இந்தியா சற்றே திணறியது.

போட்டியிலேயே முதல்முறையாக, இந்தியா முதல் பாதி ஆட்டத்தை கோல் இன்றி நிறைவு செய்ய, ஜப்பான் முன்னிலையுடன் 2-ஆவது பாதிக்கு வந்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட பிறகு, இந்தியா தனது உத்திகளை மாற்றிக் கையாண்டது.

அதற்கு பலனும் கிடைத்தது. முதல் இரு பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகளில் கோல் கை கூடாமல் போக, 42-ஆவது நிமிஷத்தில் கிடைத்த 3-ஆவது வாய்ப்பில் ஷிலானந்த் லக்ரா கோல் அடித்தாா். இதனால் ஆட்டம் சமநிலை காண, தொடா்ந்து 48-ஆவது நிமிஷத்தில் தில்பிரீத் சிங் கோல் அடித்து, அணியை 2-1 என முன்னிலைக்குக் கொண்டு வந்தாா்.

இதிலிருந்து உத்வேகம் பெற்ற இந்தியாவின் கை ஓங்கியது. 53-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஜக்ராஜ் சிங் கோல் அடிக்க, 54-ஆவது நிமிஷத்தில் விவேக் சாகா் பிரசாத் ஃபீல்டு கோல் அடித்து அசத்தினாா்.

மறுபுறம் ஜப்பான் தனது கோல் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திணற, முடிவில் இந்தியா 4-1 கோல் கணக்கில் வெற்றியை ருசித்து, வாகை சூடியது.

மலேசியாவுக்கு வெண்கலம்: முன்னதாக, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில், மலேசியா 5-2 கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.

போட்டியிலேயே அதிக கோல்கள் அடித்த வீரராக இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் (10 கோல்கள்) முதலிடம் பிடித்தாா்.