FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரையிறுதிக்கு முன்னேறினார் ஷெல்டன்

பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.

7 நவம்பர் 2026, 2:26 am
வெற்றிக் களிப்பில் பென் ஷெல்டன் (கோப்புப்படம்) - படம்: ஏபி
பகிர்:

பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் அவர் 6-4, 4-6, 6-3 என்ற செட்களில், 12-ஆம் இடத்திலிருந்த சக அமெரிக்கரான டாமி பாலை வீழ்த்தினார்.

இதர ஆட்டங்களில், ரவுண்ட் ஆஃப் 16-இல், நார்வேயின் கேஸ்பர் ரூட் 6-3, 6-3 என்ற நேர் செட்களில், ஜெர்மனியின் ஜான் லெனார்டு ஸ்ட்ரஃபை வீழ்த்தினார். போர்ச்சுகலின் நுனோ போர்ஜஸ் 6-0, 6-2 என, பெருவின் இக்னேசியோ புûஸ வென்றார். இதையடுத்து காலிறுதியில் ரூட் - போர்ஜஸ் சந்திக்கின்றனர்.

Advertisement

Advertisement

இருவரும் இதுவரை 4 முறை மோதியிருக்க, இருவருமே தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளனர். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ், காலிறுதிக்கு முன்னேறினார்.

முந்தைய சுற்றில் அவரை எதிர்கொள்ளவிருந்த இத்தாலியின் மேட்டியோ பெரட்டினி காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதால், அல்கராஸ் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டார்.

போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் 3-6, 4-6 என, அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸிடம் தோல்வியுற்றார்.

இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 5-7, 6-3, 4-6 என, பிரான்ஸின் லூகா வான் அஸ்சேவை வெளியேற்றினார்.

ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா 2-6, 6-3, 7-5 என்ற செட்களில், ஆர்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரியை சாய்த்தார். அல்கராஸ் - ஃப்ரிட்ஸ், ஹிஜிகடா - அஸ்சே ஆகியோர் மோதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.