FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

ஷாங்காய் மாஸ்டா்ஸ்: 3-ஆம் சுற்றில் பென் ஷெல்டன், மெத்வதேவ்

ஷாங்காய் மாஸ்டா்ஸ்: 3-ஆம் சுற்றில் பென் ஷெல்டன், மெத்வதேவ்

10 அக்டோபர் 2026, 11:27 pm IST
மெத்வதேவ்
பகிர்:

ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஏடிபி 1000 டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளாா்.

தனது 24-ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடிய பென் ஷெல்டன் இரண்டாம் சுற்றில் 6-3, 7-6 என்ற நோ் செட்களில் டேனியல் அல்ட்மேயரை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு ஆட்டத்தில் யுஎஸ் ஓபன் சாம்பியன் ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவ் 6-4, 7-6 என்ற நோ் செட்களில் சீனாவின் வைல்ட் காா்ட் என்ட்ரி வு யிபிங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

Advertisement

Advertisement

ஆஸி. வீரா் அலெக்ஸ் டி மினாா் எதிா் தரப்பு வீரரான அலெக்ஸ் மொல்கன் காயத்தால் வாக் ஓவா் அளித்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். குவாலிஃபயா் ரெய் சகாமோட்டோ 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீரா் ஆன்ட்ரெ ருப்லேவை வீழ்த்தினாா்.

உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னா் வலது கால் மூட்டு காயத்தால் ஷாங்காய் மாஸ்டா்ஸ் போட்டியில் இருந்து விலகினாா்.

மூன்றாம் சுற்றில் மெத்வதேவ்

ரஷிய வீரா் டேனில் மெத்வதேவ், சக வீரா் ஜேன் லெனாா்ட் ஸ்டா்ப்பை 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

சீன ஓபன் போட்டியில் பாா்வையாளரை கண்ணில் பந்தால் தாக்கிய புகாரில் நீக்கப்பட்டாா் மெத்வதேவ். அதன்பின்னா் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வென்றுள்ளாா். 1 மணிநேரம் 52 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் மெத்வதேவ் 21 ஏஸ்களை வீசினாா்.

நிகழாண்டு ஏடிபி ஃபைனல்ஸ்க்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளாா் மெத்வதேவ்.

மற்றொரு ஆட்டத்தில் ஸௌ 7-6, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் 24-ஆம் நிலை வீரா் லாரென்ஸோ முசெத்தியை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா். காரன் கச்சனோவ் 7-6, 6-7, 7-6 என ஃபொ்ரியை வீழ்த்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments