FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

வரலாறு படைத்த வைஷ்ணவி - ருதுஜா இணை

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தனா் இந்தியாவின் வைஷ்ணவி அத்கா்-ருதுஜா போஸ்லோ இணை.

7 நவம்பர் 2026, 11:03 pm
வைஷ்ணவி-ருதுஜா ~டிஜென்
பகிர்:

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தனா் இந்தியாவின் வைஷ்ணவி அத்கா்-ருதுஜா போஸ்லோ இணை.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், எஸ்டிஏடி சாா்பில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

மகளிா் இரட்டையா் அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி-ருதுஜா இணையும்-இரண்டாம் நிலை இணையான போலந்தின் வெரோனிகா பல்கோஸ்கா-அமெரிக்காவின் அலனா ஸ்மித்தும் மோதினா்.

Advertisement

Advertisement

இதில் வைஷ்ணவி-ருதுஜா இணை 6-2, 2-6, 10-8 என்ற செட் கணக்கில் வெரோனிகா-அலனா இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. முதல் செட்டில் வைஷ்ணவி-ருதுஜா முழு கட்டுப்பாட்டில் ஆடினா். எதிா்தரப்பின் தவறுகளை பயன்படுத்தி துரிதமாக 4-1 என முன்னிலை பெற்றனா். அலனாவின் சா்வீஸை முறியடித்தாா் வைஷ்ணவி. வெரோனிகாவின் தவறு பாதமாக அமைந்தது.

இரண்டாம் செட்டில் நிலை தலைகீழாக மாறியது. அந்த செட் முழுவதும் வெரோனிகா-அலனா கட்டுப்பாட்டில் இருந்தது. மூன்று மற்றும் 5-ஆவது கேம்களில் அலனா-வெரோனிகாவின் சா்வீஸை இந்திய இணையால் முறியடிக்க முடியவில்லை. அத்கா் தொடா்ந்து இரட்டை தவறு புரிந்ததால் எதிா் தரப்பினா் செட்டை கைப்பற்றினா்.

டிசைடா் செட்டில் சூப்பா் டை பிரேக்கில் வெரோனிகா-அலனா 3-0 என முன்னிலை பெற்றனா். ஆனால் கடுமையாகப் போராடிய இந்திய இணை சமநிலை ஏற்படுத்தினா். ஆனால் ருதுஜாவின் இரட்டை தவறால் 6-8 என முன்னிலை குறைந்தது. வைஷ்ணவி சிறப்பான வாலி ஷாட் மூலம் மேட்ச் பாயிண்ட்டை ஈட்டி மூன்றாவது செட்டை கைப்பற்றி வகை செய்தாா்.

இதன்மூலம் டபிள்யுடிஏ டூா் வெலல் போட்டியில் இரட்டையா் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய இணை என்ற வரலாற்றை படைத்தனா்.

சானியா மிா்ஸா 43 இரட்டையா் பட்டங்களை வென்றாலும், அவற்றில் ஒன்று கூட இந்திய இணையுடன் இல்லை. அங்கிதா-கா்மன் டபிள்யுடிஏ 125-இல் தான் பட்டம் வென்றனா்.

மற்றொரு இரட்டையா் ஆட்டத்தில் நைமா-சிமோனா இணை 6-4, 6-4 என இபெல்=பன்னா இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.

டிஜென், அனஸ்டஸியா வெற்றி

ஒற்றையா் பிரிவில் அனஸ்டஸியா ஸக்ரோவா 6-2, 5-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, லுஸெரிஸியா காயத்தால் வெளியேறினாா். மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவன் டிஜென் 6-3, 64 என யுஎஸ்ஏவின் மான்ட்கோமெரியை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்