FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!

தடை தாண்டுதல் போட்டியில் 17 வயதான வீராங்கனை ஷெளர்யா அவினாஷ் அம்புரே பதக்கம் வென்றது குறித்து...

ஷெளர்யா அவினாஷ் அம்புரே - எக்ஸ்
பகிர்:

இளையோர் ஒலிம்பிக் தடை தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஷெளர்யா அவினாஷ் அம்புரே வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இப்போட்டியில் இந்தியாவுக்கு முதல்முறை பதக்கம் கிடைத்துள்ளது.

4-வது இளையோர் ஒலிம்பிக் (யூத் ஒலிம்பிக்) போட்டிகள் செனகல் நாட்டின் தலைநகரான டகாரில் அக்டோபர் 31 முதல் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஷெளர்யா அவினாஷ் அம்புரே கலந்துகொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 13.59 விநாடிகளில் இலக்கை எட்டி ஷெளர்யா வெண்கலப் பதக்கம் வென்றார்.

Advertisement

Advertisement

இளையோர் ஒலிம்பிக் கலப்பு போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதனால், இளையோர் ஒலிம்பிக்கில் தடை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஷெளர்யா.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஷெளர்யா, 17 வயதில் இச்சாதனையை படைத்துள்ளார். இவருக்கு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

summary

Shourya Avinash Ambure wins Bronze in the Women’s 100m Hurdles at 2026 Youth Olympic Games

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.