FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இறுதியில் இன்று இந்தியா - பாக். மோதல்

தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 17) பலப்பரீட்சை நடத்துகின்றன.

17 நவம்பர் 2026, 5:25 am
- X | Indian Football
பகிர்:

தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 17) பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு சாம்பியனான இந்தியா, 10-ஆவது முறையாகக் கோப்பை வெல்லும் முனைப்புடன் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. இந்திய தரப்பில் 2-ஆம் நிலை அணியே இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டிருந்தாலும், கோப்பை இந்தியா வசமாகும் என்ற கணிப்பே உள்ளது.

Advertisement

Advertisement

மறுபுறம் பாகிஸ்தான், ஆச்சா்யமளிக்கும் வகையில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி வந்திருக்கிறது. இதற்கு முன்பு 4 முறை அரையிறுதியில் தோற்ற பாகிஸ்தான், இந்த முறை வங்கதேசத்தை அதில் வென்று, முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் ஏற்கெனவே குரூப் சுற்றில் மோதியபோது, இந்தியா 3-2 கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் சா்வதேச களத்தில் இதுவரை 30 முறை சந்தித்திருக்க, இந்தியா 17 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 4 ஆட்டங்கள் பாகிஸ்தானுக்கு சாதகமாக முடிந்திருக்க, 9 ஆட்டங்கள் டிரா ஆகின.

சீனியா் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

போட்டியில் இதுவரை அதிகபட்சமாக தலா 3 கோல்கள் அடித்துள்ள, இந்தியாவின் சுஹைல் அகமது பாட், பாகிஸ்தானின் நஜீப் உல்லா கான் மோதும் ஆட்டம் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.