FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

போர்ச்சுகல் அணியின் தோல்வி மகிழ்ச்சி அளிக்கிறது: ரொனால்டோவின் தாய்

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தாய் அளித்த சர்ச்சையான பேட்டி குறித்து...

48 வினாடிகள் முன்பு
கிறிஸ்டியானோ ரொனால்டோ, அவரது தாயார் டோலோரஸ் அவிரோ - படங்கள்: இன்ஸ்டா / டோலோரஸ் அவிரோ
பகிர்:

நேஷன்ஸ் லீக் தொடரில் போர்ச்சுகல் கால்பந்து அணி தோல்வியுற்றது தனக்கு தனிப்பட்ட விதத்தில் மகிழ்ச்சி அளிப்பதாக கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தாய் மரியா டோலோரஸ் அவிரோ கூறியது சமூக வலைதளத்தில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் நாடுகளுக்கு இடையேயான மிகப்பெரிய கால்பந்துத் தொடராக நேஷன்ஸ் லீக் இருக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி டென்மார்க்கிடம் 1- 4 என படுதோல்வி அடைந்தது.

Advertisement

Advertisement

கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அணியில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்தார். தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்திருந்தார்.

போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல்கள் (146) அடித்துள்ளார். சர்வதேச அளவில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச கோல் இதுதான் என்பதும் கவனிக்கத்தக்கது. 41 வயதான இவர் ஓய்வை அறிவித்த விதம் சர்ச்சையானது.

முறையான விடைபெறுதல் இல்லாமலேயே ரொனால்டோ வெளியேறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், டென்மார்க்கிடம் போர்ச்சுகல் தோல்வியுற்றது பேசுபொருளானது.

இது குறித்து 433 கால்பந்து பக்கத்தில் ரொனால்டோவின் தாய் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் ரொனால்டோவின் தாய் மரியா டோலோரஸ் அவிரோ கூறியிருப்பதாவது:

எனது மகன் ரொனால்டோ ஏமாற்றப்பட்டார். அவருக்கு மரியாதை அளிக்கவில்லை; குறிப்பாக அவரது சக வீரர்கள் கூட அவரை மதிக்கவில்லை. பிரியாவிடை அவருக்கு முன்பாக நடந்திருக்க வேண்டும்

ஸ்போர்டிங் சிபி அணி அளித்த மாரியாதைபோல் தேசிய அணியும் செய்திருக்க வேண்டும். போர்ச்சுகல் தோல்வியுற்றது எனது மகனுக்கு வருத்தமாக இருக்கலாம்; ஆனால், எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது என்றார்.

summary

Portugal team's failure makes me happy: Cristiano Ronaldo's mother Maria Dolores dos Santos Aveiro

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.