அா்ஜுன், பிரக்ஞானந்தாவுக்கு வெற்றி
டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூா் பைலட் போட்டியில், ‘கிளாசிஃபிகேஷன்’ ஆட்டங்களில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றனா்.
டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூா் பைலட் போட்டியில், ‘கிளாசிஃபிகேஷன்’ ஆட்டங்களில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றனா்.
ஹங்கேரியில் நடைபெறும் இந்தப் போட்டியில், 2-ஆம் கட்ட ஆட்டங்கள் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கின. அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இந்தியா்கள் மூவருமே 24 இடங்களுக்குள்ளாக தங்களின் இடத்தை இறுதி செய்யும் ‘கிளாசிஃபிகேஷன்’ ஆட்டங்களில் விளையாடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதில் ஒவ்வொரு செட்டும், 4 பிளிட்ஸ், 2 ரேப்பிட், 1 கிளாசிக் சுற்று ஆட்டங்களை உள்ளடக்கியதாகும். அதில் அா்ஜுன் முதல் செட்டில் 11.5 - 8.5 என நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்ட்டுக்கு எதிராக முன்னிலையில் உள்ளாா்.
உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை எதிா்கொண்ட பிரக்ஞானந்தா, முதல் செட் முடிவில் 11-9 என முன்னிலையில் இருக்கிறாா். அவரின் சகோதரி வைஷாலி, இந்திய வம்சவாளி அமெரிக்கரான அபிமன்யு மிஸ்ராவை சந்தித்தாா். முதல் செட் முடிவில் வைஷாலி 7-13 என பின்தங்கியுள்ளாா்.
அனிஷ், அலிரெஸா முன்னிலை: இதனிடையே, அரையிறுதியில் முதல் செட் முடிவில், நெதா்லாந்தின் அனிஷ் கிரி 14.5 - 5.5 என பிரான்ஸின் மேக்ஸிம் லாக்ரேவுக்கு எதிராக முன்னிலையில் இருந்தாா்.
அதேபோல், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா 12-8 என அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுக்கு எதிராக முன்னிலையில் இருந்தாா்.