24 ஓவரில் இலக்கை அடைந்த ஆஸ்திரேலியா..! 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா குறித்து...
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 24 ஓவர்களில் இலக்கைக் கடந்த ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பெர்த் திடலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
Advertisement
Advertisement
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 33.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக கஸ் அட்கின்ஸன் 29 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் அறிமுக வீரர் மாலி பியர்ட்மேன் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்த, ஸ்பென்சர் ஜான்சென் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 23.3 ஓவர்களில் 132/3 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மாலி பியர்ட்மேன் வரலாற்றுச் சாதனையுடன் ஆட்ட நாயகன் விருது வென்றார். மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவல் திடலில் வரும் நவ.15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மூன்றாவது போட்டி நவ.18ஆம் தேதி ஹோபர்ட் திடலில் நடைபெறவிருக்கிறது.