ஹாங்காங் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய லக்ஷயா சென், சாத்விக் - சிராக்!
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்தியர்கள் குறித்து...

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியர்கள் மூவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்கள். ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென்னும் இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் இணைந்து முன்னேறியுள்ளார்கள்
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டிகள் நவ.17 முதல் 22 வரை நடைபெற இருக்கின்றன. இதில் காலிறுதிக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென் சிங்கப்பூரின் கே.ஒய். லோஹா உடன் மோதினார். இந்தப் போட்டியில் லக்ஷ்யா சென் 21-17, 21-10, 21-13 ஆகிய கேம்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில்
Advertisement
Advertisement
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியரகள் சாத்விக் - சிராக் கூட்டணி சீனாவின் ஹூ கியூடன் - லின் சியாங்கி உடன் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் இந்திய இணையினர் 21-12, 13-21, 21-16 என்ற கேம்களில் வென்றார்கள். அரையிறுதியில் மலேசிய வீரர்களுடன் மோதவிருக்கிறார்கள்.
சமீபத்தில் ஜப்பான் மாஸ்டர்ஸ் ஆடவர் தனிநபர் பிரிவில் லக்ஷயா சென் பட்டம் வென்றிருந்தார். ஹாங்காங் ஓபனிலும் பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.