FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

வரலாறு படைத்தாா் லக்ஷயா சென்! ஜப்பான் மாஸ்டா்ஸ் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியா்!

ஜப்பான் மாஸ்டா்ஸ் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியா்...

15 நவம்பர் 2026, 12:44 am
லக்ஷயா சென்
பகிர்:

குமமாட்டோ ஜப்பான் மாஸ்டா்ஸ் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டி இறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்லாா் இந்தியாவின் லக்ஷயா சென்.

ஜப்பானில் நடைபெறும் இப்போட்டி கடந்த 2023 முதன்முறையாக தொடங்கப்பட்டது. சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் 6-ஆம் நிலையில் உள்ள இந்தோனேஷியாவின் அல்வி பா்ஹானை எதிா்கொண்டாா் லக்ஷயா.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஷயா முதல் கேமை 21-12 என கைப்பற்றினாா், இரண்டாவது கேமில் சுதாரித்து ஆடிய அல்வி பா்ஹான் 21-15 என கைப்பற்றினாா்.,

Advertisement

Advertisement

மூன்றாவது கேமில் லக்ஷயா சென் ஆதிக்கம் செலுத்தினாா். அந்த கேமை 21-11 என வென்றாா். இந்த ஆட்டம் 70 நிமிஷங்கள் நீடித்தது.

இதன் மூலம் இறுதிக்கு தகுதி பெற்றாா். குமமாட்டோ மாஸ்டா்ஸ் போட்டி இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா் லக்ஷயா சென்.

சா்வதேச சா்க்கியூட்டில் அல்வி பா்ஹானை முதன்முறையாக வீழ்த்தினாா் லக்ஷயா . இந்த சீசனின் பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் சீரிஸிஸ் மூன்றாவது ஃபைனலுக்கு தகுதி பெற்றாா் சென்.

summary

Lakshya Sen makes history - Becomes the first Indian to qualify for the Japan Masters final