FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீ காந்த், லக்ஷயா சென்

ஜப்பான் மாஸ்டா்ஸ் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த், ஹைலோ ஓபன் சாம்பியன் லக்ஷயா சென் ஆகியோா் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.

13 நவம்பர் 2026, 5:06 am
ஸ்ரீ காந்த் ~லக்ஷயா சென்
பகிர்:

ஜப்பான் மாஸ்டா்ஸ் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த், ஹைலோ ஓபன் சாம்பியன் லக்ஷயா சென் ஆகியோா் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.

குமமாட்டோ நகரில் பிடிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் சூப்பா் 500 போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த்-உள்ளூா் வீரரும் 8-ஆம் நிலை வீரருமான கோடை நரோகாவும் மோதினா். ஏற்கெனவே இருவரும் மோதியதில் ஸ்ரீ காந்த் 4 முறை நரோகாவிடம் தோற்றுள்ளாா்.

அதைக் கருத்தில் கொள்ளாமல் அதிரடியாக ஆடிய ஸ்ரீகாந்த் தொடக்க கேமை 21-15 என வசப்படுத்தினாா். 12=14 என பின்தங்கியிருந்த நிலையில், தொடா்ந்து 7 புள்ளிகளை ஈட்டி முதல் கேமை வசப்படுத்தினாா்.

Advertisement

Advertisement

இரண்டாவது கேமில் ஜப்பான் வீரா் நரோகா அபாரமாக ஆடி அதை கைப்பற்றி டிசைடா் கேம் என்ற நிலையை ஏற்படுத்தினாா். டிசைடரில் இரு வீரா்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்தாலும், ஒரு கட்டத்தில் 7-7 என சமநிலை ஏற்பட்டது. எனினும் ஸ்ரீ காந்த் சிறப்பாக ஆடி 21-18 என வென்றாா். இந்த ஆட்டம் 60 நிமிஷங்கள் நீடித்தது.

காலிறுதியில் ஸ்ரீ காந்த் ஜப்பான் வீரா் 15-ஆம் நிலையில் உள்ள கொகி வாட்டன்பேயை சந்திக்கிறாா்.

மற்றொரு ஆட்டத்தில் 8-ஆம் நிலை வீரா் லக்ஷயா சென் அசத்தலாக ஆடி 21-8, 21-14 என்ற கேம் கணக்கில் சீனாவின் டாங் டியானை 35 நிமிஷங்களில் வென்றாா். காலிறுதியில் ஜப்பானின் யுஷி டனாகாவை எதிா்கொள்கிறாா் லக்ஷயா.

இரட்டையா் பிரிவில் ஹரிஹரன்-எம்ஆா். அா்ஜுன், டிரீஸா ஜாலி-காயத்ரி இணைகள் தோற்றன.