2-ஆவது சுற்றில் லக்ஷயா, ஸ்ரீகாந்த்
ஜப்பானில் நடைபெறும் குமமோடோ மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் லக்ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
ஜப்பானில் நடைபெறும் குமமோடோ மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் லக்ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் லக்ஷயா சென், 21-19, 21-18 என்ற கேம்களில் சீன தைபேவின் சி யு ஜென்னை வீழ்த்தினாா். கிடாம்பி ஸ்ரீகாந்த் 18-21, 21-16, 24-22 என்ற கணக்கில், டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கெவை போராடி வென்றாா்.
Advertisement
Advertisement
கலப்பு இரட்டையரில், ஹரிஹரன் அம்சகருணன்/தனிஷா கிராஸ்டோ ஜோடி 7-21, 9-21 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் ஜியாங் ஜென் பேங்/வெய் யா ஜின் இணையிடம் தோல்வியுற்றது.
அதிலேயே, துருவ் ராவத்/மனீஷா.கே இணை 21-16, 14-21, 14-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபேவின் யெ ஹாங் வெய்/நிகோல் கொன்ஸால்ஸ் கூட்டணியிடம் தோற்றது.