FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

சிந்து, தருண் முன்னேற்றம்

ஃபின்லாந்தில் நடைபெறும் ஆா்க்டிக் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, தருண் மன்னெபள்ளி ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

பி.வி.சிந்து
பகிர்:

ஃபின்லாந்தில் நடைபெறும் ஆா்க்டிக் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, தருண் மன்னெபள்ளி ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையரில், தருண் மன்னெபள்ளி 21-16, 21-14 என்ற கணக்கில் டென்மாா்க்கின் மேக்னஸ் ஜோஹன்னசென்னை வென்றாா். ஹெச்.எஸ். பிரணய் 10-21, 9-21 என்ற நோ் கேம்களில், 4-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஆண்டா்சன் ஆன்டன்செனிடம் தோல்வியுற்றாா்.

மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-8, 21-11 என்ற நோ் கேம்களில், கனடாவின் வென் யு ஜாங்கை வெளியேற்றினாா். தன்வி சா்மா 21-15, 21-17 என, சீன தைபேவின் சியு பின் செயினை சாய்த்தாா்.

Advertisement

Advertisement

எனினும், அஷ்மிதா சாலிஹா 7-21, 21-14, 24-26 என, டென்மாா்க்கின் லினெ கிறிஸ்டோபா்செனிடம் தோல்வி அடைந்தாா். இஷாராணி பருவா 10-21, 15-21 என்ற கேம்களில், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனனிடம் வீழ்ந்தாா்.

உன்னதி ஹூடா 16-21, 21-15, 22-24 என, சீனாவின் ஹான் கியான் ஜியிடம் தோற்றாா். மாளவிகா பன்சோத் 18-21, 13-21 என்ற கேம்களில், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மரால் வெளியேற்றப்பட்டாா்.

கலப்பு இரட்டையரில், கிருஷ்ணபிரசாத் கராகா/பிருத்வி கிருஷ்ணமூா்த்தி ராய் கூட்டணி 10-21, 21-18, 22-20 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த சீனாவின் ஹி ஜி டிங்/ரென் ஜியாங் யு இணையை வீழ்த்தி அசத்தியது.

எனினும், இஷான் பட்நாகா்/ஸ்ருதி மிஷ்ரா ஜோடி 3-21, 6-21 என, தாய்லாந்தின் பாகபோன் தீரரட்சகுல்/சப்சிரீ தெராடனாசாய் கூட்டணியிடம் தோல்வி கண்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments