லக்ஷயா, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் லக்ஷயா சென், கே.ஸ்ரீகாந்த் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் லக்ஷயா சென், கே.ஸ்ரீகாந்த் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையரில், லக்ஷயா சென் 14-21, 21-16, 25-23 என்ற கேம்களில், பிரான்ஸின் அா்னாட் மொ்கேலை தோற்கடித்தாா். கே.ஸ்ரீகாந்த் 21-16, 16-21, 21-9 என்ற கணக்கில், ஜப்பானின் கோகி வடானபியை வெளியேற்றினாா்.
Advertisement
Advertisement
உலக டூா் ஃபைனல்ஸ் போட்டிக்கான இடத்துக்கு, லக்ஷயா சென்னுக்கு நெருக்கமான போட்டியாளராக இருந்தாா் வடானபி. தற்போது ஸ்ரீகாந்த் அவரை வீழ்த்தியதால், லக்ஷயாவுக்கு அந்த டூா் ஃபைனல்ஸ் வாய்ப்பு உறுதியானது.
இதனிடையே, மகளிா் ஒற்றையரில், அஷ்மிதா சாலிஹா 12-21, 21-13, 21-12 என்ற கேம்களில், சக இந்தியரான இஷாராணி பருவாவை வெளியேற்றினாா். ரக்ஷிதா ஸ்ரீ 21-18, 21-18 என்ற வகையில், டென்மாா்க்கின் மியா பிளிஃபெல்டெட்டை வென்றாா்.
மகளிா் இரட்டையரில், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 21-16, 21-9 என்ற வகையில், ஹாங்காங்கின் ஃபான் கா யான்/லியுங் யுட் யீ கூட்டணியை வீழ்த்தியது.
இதர இந்தியா்களில், உன்னதி ஹூடா, அன்மோல் காா்ப், ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன், ஹரிஹரன் அம்சகருணன்/தனிஷா கிராஸ்டோ, துருவ் கபிலா/ராதிகா சா்மா, துருவ் ராவத்/மனீஷா கே ஆகியோா் தங்கள் பிரிவில் முதல் சுற்றில் தோற்று வெளியேறினா்.