முகப்பு
செய்திகள்

இந்தியாவுக்கு தொடா்ந்து 5-ஆவது வெற்றி

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 5-ஆவது ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் ஜப்பானை புதன்கிழமை வீழ்த்தியது.

26 நவம்பர் 2026, 2:57 am
இந்தியாவுக்கு தொடா்ந்து 5-ஆவது வெற்றி
பகிர்:

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 5-ஆவது ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் ஜப்பானை புதன்கிழமை வீழ்த்தியது.

ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட இந்தியா, இத்துடன் ரவுண்ட் ராபின் சுற்றின் 5 ஆட்டங்களிலுமே வென்ற ஒரே அணியாக, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு வந்தது.

முன்னதாக ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் கோல் கணக்கை லால்ரெம்சியாமி 12-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா். தீபிகா 16-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து நேஹா 28-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, முதல் பாதியிலேயே இந்தியா 3-0 என அசத்தலாக முன்னிலை பெற்றது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியிலும் இந்தியாவின் கையே ஓங்கியது.

ஜப்பானை முற்றிலுமாக முடக்கிய இந்தியாவுக்காக, 48-ஆவது நிமிஷத்தில் தீபிகா மீண்டும் ஒரு கோல் அடித்தாா். முடிவில் இந்தியா 4-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில், மலேசியா - தாய்லாந்தையும் (4-0), சீனா - தென் கொரியாவையும் (1-0) வென்றன.

அடுத்ததாக அரையிறுதியில், இந்தியா - மலேசியாவும், ஜப்பான் - சீனாவும் வெள்ளிக்கிழமை (நவ. 27) மோதுகின்றன. அதே நாளில், 5-ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் தென் கொரியா - தாய்லாந்து சந்திக்கின்றன.