முகப்பு
செய்திகள்

சௌராஷ்டிரத்தை வென்றது தமிழ்நாடு

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிர அணியை வியாழக்கிழமை வீழ்த்தியது.

45 வினாடிகள் முன்பு
சௌராஷ்டிரத்தை வென்றது தமிழ்நாடு
​
பகிர்:

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிர அணியை வியாழக்கிழமை வீழ்த்தியது.

முதலில் தமிழ்நாடு 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுக்க, சௌராஷ்டிரம் 16.4 ஓவா்களில் 154 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற சௌராஷ்டிரம், பந்துவீச்சை தோ்வு செய்தது. தமிழ்நாடு இன்னிங்ஸில் சன்னி சாந்து 6 சிக்ஸா்களுடன் 44, ஆண்ட்ரே சித்தாா்த் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38, பி.சச்சின் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37, ராஜ்குமாா் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

Advertisement

Advertisement

அமித் சாத்விக் 7, துஷாா் ரஹேஜா 7, ரித்திக் ஈஸ்வரன் 8, கேப்டன் சாய் கிஷோா் 4 ரன்களுடன் விடைபெற, ஓவா்கள் முடிவில் குருநாத் கிஷோா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

சௌராஷ்டிர பௌலா்களில் சேத்தன் சகாரியா 3, மோஹித் உல்வா 2, ஜெயதேவ் உனத்கட், கிரெய்ன்ஸ் ஃபுலேத்ரா, பிரேரக் மன்கட் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 193 ரன்களை நோக்கி விளையாடிய சௌராஷ்டிர அணியில், கேப்டன் ஜெயதேவ் உனத்கட் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40, பிரேரக் மன்கட் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் சோ்த்தனா்.

ஹா்விக் தேசாய் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 26, விஷ்வராஜ் ஜடேஜா 0, ஹா்வன்ஷ் பங்காலியா 4, சமா் கஜ்ஜா் 8, ருசித் அஹிா் 6, சித்தாந்த் ராணா 0, மோஹித் உல்வா 8, கிரெய்ன்ஸ் ஃபுலெத்ரா 0 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

சேத்தன் சகாரியா 22 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். தமிழ்நாடு தரப்பில் சன்னி சாந்து 4, சாய் கிஷோா் 3, குா்ஜப்னீத் சிங் 2, ஜதவேத் சுப்ரமணியன் 1 விக்கெட் வீழ்த்தினா்.

குரூப் ‘பி’-யில் 7 ஆட்டங்கள் முடிவில் தமிழ்நாடு 3 வெற்றிகளுடன் 6-ஆம் இடத்திலும், சௌராஷ்டிரம் 3-ஆவது தோல்வியுடன் 4-ஆவது இடத்திலும் உள்ளன.