FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்திய கோல்ஃப் மகளிரணிக்கு வெள்ளி..! தங்கம் வென்ற பிரணவியும் இதில் பங்கேற்பு!

ஆசிய விளையாட்டில் இந்திய கோல்ஃப் மகளிரணி வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து...

வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய கோல்ஃப் மகளிரணி - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்
பகிர்:

ஆசிய விளையாட்டில் இந்திய கோல்ஃப் மகளிரணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த மகளிரணியில் பிரணவி இடம்பெற்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்திய கோல்ஃப் மகளிரணி பங்கேற்ற இறுதிப் போட்டியில் 546 ஸ்டோரோக்குகளில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்க வென்றுள்ளது. இந்த அணியில் பிரணவி யுஆர்எஸ், அதிதி அசோக், தீக்‌ஷா தாகர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

இந்தப் பிரிவில் சீன அணியினர் 538 ஸ்டோரோக்குகளில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்கள். சீன தைபேயி 550 ஸ்டோரோக்குகளில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலம் வென்றார்கள்.

முன்னதாக பிரணவி தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார். இத்துடன் இந்திய கோல்ஃப் மகளிருக்கு இரண்டாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக, இதுவரை இந்தியாவுக்கு 18 தங்கம், 26 வெள்ளி, 35 வெண்கலம் உடன் 79 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

summary

Another medal for Indian women’s golf! The trio of Pranavi Urs, Aditi Ashok and Diksha Dagar won silver in the women’s team

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments