வெள்ளி வென்றார் அன்டிம் பாங்கல்..! இந்தியாவுக்கு 85ஆவது பதக்கம்!
ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை அன்டிம் பாங்கல் குறித்து...
ஆசிய விளையாட்டில் இந்திய மல்யுத்த வீராங்கனை அன்டிம் பாங்கல் 53 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி வென்று அசத்தினார். இத்துடன் பதக்க எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மகளிருக்கான மல்யுத்தத்தில் 53 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்டிம் பாங்கல் - ஜப்பானின் மோ கியோக்கா உடன் மோதினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை 0-9 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியுற்றார். இதனால், வெள்ளிப் பதக்கத்துடன் அன்டிம் பாங்கல் வெளியேறினார்.
இத்துடன் இந்தியாவுக்கு 85 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலங்கள் அடங்கும். பதக்க வரிசையிலும் இந்தியா நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 பதக்கப் பட்டியல்
1. சீனா - 340 பதக்கம் (168 தங்கம்)
2. ஜப்பான் - 266 பதக்கம் (83 தங்கம்)
3. தென் கொரியா - 149 பதக்கம் (38 தங்கம்)
4. இந்தியா - 85 பதக்கம் (21 தங்கம்)
5. உஸ்பெகிஸ்தான் - 70 பதக்கம் (21 தங்கம்)
Antim Panghal finishes her asian games 2026 campaign with a silver medal in wrestling
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.