FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய விளையாட்டு: தங்கம் வென்ற வில்வித்தை வீராங்கனை; 77 பதக்கங்களுடன் இந்தியா!

தனிநபர் மகளிர் ரிகர்வ் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் மொஹோத் தங்கம் வென்றது குறித்து...

தங்கம் வென்ற வீராங்கனை மொஹோத் - ANI
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மகளிர் ரிகர்வ் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் குங்குமம் மொஹோத் (17) தங்கம் வென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளிக்கிழமை (அக். 2) ஒரே நாளில் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்றது. இந்த நிலையில், இதுவரையில் 16 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, இன்று (அக். 3) மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது.

Advertisement

Advertisement

தனிநபர் மகளிர் ரிகர்வ் வில்வித்தை இறுதிப் போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஓ யேஜினை 6 - 5 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் குங்குமம் மொஹோத் (17) தங்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் தனிநபர் ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனையாக மட்டுமின்றி, தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனையாகவும் குங்குமம் சாதனை படைத்துள்ளார்.

இதுவரையில் 17 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என இந்தியா மொத்தமாக 77 பதக்கங்களை வென்றுள்ளது.

summary

Asian Games: 17-year-old Kumkum Mohod bags historic gold in women's recurve individual

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments