மல்யுத்தத்தில் தங்கம் வென்ற அமன் ஷெராவத்..! இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 82!
ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் குறித்து...
ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 20 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆடவருக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் - தஜிகிஸ்தானின் பெலோல்யுப்ஸ்கி அயால் உடன் மோதினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் அபார வென்று தங்கம் வென்றார். தஜிகிஸ்தான் வீரர் வெள்ளியும் சீன வீரர் வெண்கலமும் வென்றார்கள்.
இந்தியாவுக்கு இத்துடன் 82 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 20 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.
இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம் கிடைத்தால், பதக்கப் பட்டியலில் உஸ்பெகிஸ்தானை முந்தி நான்காவது இடம் பிடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Indias Aman Sehrawat won the gold medal in the men's freestyle 57kg wrestling event at the asian games 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.