நாம் வீழ வேண்டுமென பலரும் விரும்புகிறார்கள்... பிரியாவிடையில் மெஸ்ஸி உருக்கம்!
ஆர்ஜென்டீனாவிற்கான தனது கடைசி சர்வதேச போட்டியில் பங்கேற்ற லியோனல் மெஸ்ஸி பேசியது குறித்து...
ஆர்ஜென்டீனாவிற்கான தனது கடைசி சர்வதேச போட்டியில் பங்கேற்ற லியோனல் மெஸ்ஸி, “இந்த அணியின் ஜெர்ஸியை 20 ஆண்டுகளாக அணிந்தது மிகவும் பெருமையாக இருந்தது” எனப் பேசியுள்ளார்.
ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தனது கடைசி போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியுடன் விடைபெற்றார்.
இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 2 அசிஸ்ட், ஒரு கோல் அடித்து ஆட்ட நாயகனுக்கான விருதும் வென்றார். இந்தப் போட்டிக்குப் பிறகு மெஸ்ஸி களத்தின் நடுவில் இருந்து மைக்கில் பேசியிருப்பதாவது:
Advertisement
Advertisement
கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஜெர்ஸியை அணிவது மிகவும் பெருமையாக இருக்கிறது. சண்டையிடுவதை நான் நிறுத்தியதே இல்லை; என்னுடைய எல்லாவற்றையும் அணிக்கு கொடுப்பதை நிறுத்தியதே இல்லை. எப்போதும் திரும்ப வருவதற்கு விரும்புகிறேன். ஏனெனில், ஆர்ஜென்டீனாவிற்காக விளையாடுவது என்பது மிகவும் அழகான விஷயமாகும்.
நான் உங்கள் அனைவரையும் மிஸ் செய்யப்போகிறேன். இனிமேல் நானும் உங்களுடன் சேர்ந்து தேசிய அணியை ஆதரிப்பேன் என உறுதி செய்கிறேன்.
நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால் யாரையும் எதையும் வீழ்த்தும் அளவுக்கு வலிமையானவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். கடினமான காலங்கள் இருந்துள்ளன. நமது அணி சாதித்ததை மீண்டும் அடைவது எவ்வளவு எளிதானதல்ல. நாம் வீழ வேண்டுமென பலரும் விரும்புகிறார்கள். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியை அளித்துவிடாதீர்கள் என்றார்.
உலகக் கோப்பை 2026ல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றாலும் மெஸ்ஸி இந்த சீசனில் சிறப்பாகவே விளையாடியுள்ளார். அவரும் பேலந்தோர் விருதுக்கான பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். ஏற்கெனவே 8 முறை இதனை வென்றுள்ள மெஸ்ஸி கடைசியாக ஒருமுறை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
I never stopped fighting, never stopped giving my all Leo Messi in farewell match speech
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.