FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இறுதிப் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது..! வெற்றியுடன் விடைபெற்றார் மெஸ்ஸி!

ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி வெற்றியுடன் விடைபெற்றது குறித்து...

மெஸ்ஸியின் பிரியாவிடைக் காட்சிகள் - படங்கள்: ஏபி
பகிர்:

ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தனது கடைசி போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியுடன் விடைபெற்றார்.

மேற்கு ஆப்பிரிக்க அணியான பெனின் அணியுடன் ஆர்ஜென்டீனா தனது சொந்த மண்ணில் நட்பு ரீதியான சர்வதேச போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி கேப்டனாக விளையாடினார்.

பியூனஸ் அயர்ஸ் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மெஸ்ஸி 2 அசிஸ்ட் (48’, 6’1), பெனால்டியில் (71’) ஒரு கோல் அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியைப் பார்க்க 85,000 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். கடந்த 21 ஆண்டுகளாக ஆர்ஜென்டீனாவிற்காக விளையாடியுள்ள மெஸ்ஸி 126 கோல்கள், 70 அசிஸ்ட்டுகளை செய்துள்ளார்.

மெஸ்ஸி தலைமையில் ஆர்ஜென்டீனா 2022 உலகக் கோப்பை, 2 முறை கோபாஅமெரிக்கா கோப்பை, ஒருமுறை ஃபைனலிஸிமா கோப்பைகளை வென்றுள்ளது.

சக வீரர்கள், மெஸ்ஸியின் குடும்பத்தினர், ரசிகர்கள் என அனைவரும் கண்ணீருடன் மெஸ்ஸிக்கு பிரியாவிடை அளித்தார்கள். தொடக்கத்தில் மெஸ்ஸியும் கண்ணீருடனே விளையாட திடலுக்கு வந்தார். பின்னர் நெகிழ்ச்சியுடன் வெளியேறினார்.

summary

Messi caps Argentina farewell with a penalty and 2 assists in a 3-0 win over Benin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments