மெஸ்ஸி ஓய்வுக்குப் பிறகான முதல் போட்டியில் ஆர்ஜென்டீனா தோல்வி!
உலகக் கோப்பை இறுதிக்குப் பிறகு ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் முதல் தோல்வி குறித்து...
கால்பந்து உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டிக்குப் பிறகு ஆர்ஜென்டீன அணி தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.
லியோனல் மெஸ்ஸி ஓய்வுக்குப் பிறகு ஆர்ஜென்டீன அணி தனது முதல் போட்டியிலேயே தோல்வியைச் சந்துத்துள்ளது கால்பந்து உலகில் பேசுபொருளாகியுள்ளது.
Advertisement
Advertisement
உருகுவே உடன் ஆர்ஜென்டீனா இன்று நட்பு ரீதியான போட்டியில் தனது சொந்த மண்ணில் மோதியது. இதில் உருகுவே அணி 2-1 என வென்றது.
இந்தப் போட்டியில் 48ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீன வீரர் லியோனார்டோ பாலெர்டி ஓன் கோல் அடித்து சொதப்பினார். பின்னர் 53ஆவது நிமிஷத்தில் மாக்ஸிமிலியானோ அராவ்ஹோ கோல் அடித்தார்.
ஜூலியன் அல்வாரெஸ் 73ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார். இறுதியில் 1-2 என ஆர்ஜென்டீனா தோல்வியுற்றது. இதில் 72 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த ஆர்ஜென்டீன 18 ஷாட்டுகள் அடித்தும் அவை கோலாக மாறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
உருகுவே அணி சிறப்பான தடுப்பாட்டத்தில் செயல்பட்டு ஆர்ஜென்டீனாவை வீழ்த்தியது. 39 வயதான மெஸ்ஸி ஓய்வுக்குப் பிறகு ஆர்ஜென்டீனா கோல் அடிப்பதில் தடுமாறி வருகிறது.