FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

7-0: மெஸ்ஸியின் பிரியா விடைக்கு முன்பாக புர்கினா ஃபாஸோவை நொறுக்கிய ஆர்ஜென்டீனா!

ஆர்ஜென்டீன கால்பந்து அணி புர்கினா ஃபாஸோவை வீழ்த்தியது குறித்து...

புர்கினா ஃபாஸோவை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்ஜென்டீன வீரர்கள். - படம்: ஏபி
பகிர்:

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாஸோவை ஆர்ஜென்டீன கால்பந்து அணி 0-7 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மூன்று முறை உலகக் கோப்பை வென்ற ஆர்ஜென்டீனா கடந்த 2026ல் இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியுற்றது. அத்துடன் மெஸ்ஸி தனது ஓய்வை அறிவித்தார்.

பிரியா விடைக்காக மெஸ்ஸியை கடைசியாக ஒரு முறை விளையாட வேண்டுமென ஆர்ஜென்டீன கால்பந்து அமைப்பு கேட்டுக்கொண்டதால் அவர் அக்.6ஆம் தேதி விளையாட இருக்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சர்வதேச நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாஸோவை உடன் இன்று மோதியது. இதில் ஆர்ஜென்டீனா 7-0 என வென்றது.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் லொடாரோ மார்டினெஸ் 4,8ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். பிரிஸ்டியேனி 12ஆவது நிமிஷத்திலும் நீகோ பஸ் 35ஆவது நிமிஷத்திலும் ஜூலியன் அல்வாரெஸ் 36ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.

இரண்டாம் பாதியில் பிராங்கோ மஸ்டான்டுவோனா 57ஆவது நிமிஷத்திலும் குலியானோ சிமியோனே 90+3ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்து அசத்தினார்கள்.

மெஸ்ஸி இல்லாமலேயே இந்த இளம் ஆர்ஜென்டீன அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மெஸ்ஸியின் கடைசி சர்வதேச போட்டியைப் பார்க்க உலகம் மூழ்வதும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் இந்தப் போட்டியை ஜீ5 செயலில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

7-0: Argentina thrashes Burkina Faso ahead of Messi's farewell!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments