FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கடைசி சர்வதேச போட்டிக்கான ஜெர்ஸியை அறிமுகப்படுத்திய மெஸ்ஸி..! வைரலாகும் விடியோ!

ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி தான் விளையாடும் கடைசி சர்வதேச போட்டிக்கான ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது குறித்து...

24 வினாடிகள் முன்பு
கடைசி போட்டிக்கான ஜெர்ஸியை அறிமுகப்படுத்திய மெஸ்ஸி - படங்கள்: இன்ஸ்டா / லியோ மெஸ்ஸி
பகிர்:

ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி (39 வயது) சர்வதேச கால்பந்துப் போட்டியில் தனது கடைசி ஆட்டத்துக்கான புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆர்ஜென்டீன கால்பந்து அணிக்கு ஆக. 2005 முதல் ஆக.2026 வரை 21 ஆண்டுகள் மெஸ்ஸி விளையாடியுள்ளார். கடந்த 2022ல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர் 2026 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரைக்கும் முன்னேறிச்சென்று ஸ்பெயினிடம் 0-1 என அவரது தலைமையிலான ஆர்ஜென்டீனா தோல்வியுற்றது.

ஆர்ஜென்டீனாவிற்கு அதிக கோல்கள் (125) அடித்தவராக இருக்கும் மெஸ்ஸி, தனது ஓய்வை ஆக.31ஆம் தேதி இரவு இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். பின்னர் அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடத்த ஆர்ஜென்டீன கால்பந்து கழகத்தினால் முடிவெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஆர்ஜென்டீன அணிக்காக மெஸ்ஸி தனது கடைசி போட்டியாக வரும் அக்.6ஆம் தேதி பெனின் அணிக்கு எதிராக விளையாட ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான புதிய ஜெர்ஸியை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஒரு கடைசி போட்டி. வாழ்நாளுக்கான ஜெர்ஸி” எனக் குறிப்பிட்டுள்ள மெஸ்ஸி விடியோ ஒன்றையும் அதனுடன் வெளியிட்டுள்ளார். அதில் தங்க நிறத்திலான 10 என்ற எண் அச்சிடப்பட்டுள்ளது.

மொத்தமாக 930 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி அமெரிக்காவில் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

2021ல் கோபா அமெரிக்காவை வென்ற மெஸ்ஸி, 2024ல் உலகக் கோப்பையும் 2024ல் மீண்டும் கோபா அமெரிக்காவை தக்கவைத்தது. நூல் இழையில் 2026 உலகக் கோப்பை தவறியது. பேலந்தோர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ள மெஸ்ஸி 9ஆவது முறையாக இந்த விருதை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

summary

Lionel Messi Reveals Argentina Jersey With Gold Numbers in Video Ahead of Final International Match

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments