FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மெஸ்ஸிக்கு பிரியாவிடை..! ஆர்ஜென்டீன ஜெர்ஸியில் கடைசியாக ஓர் ஆட்டம்!

ஓய்வை அறிவித்தாலும் லியோனல் மெஸ்ஸி கடைசியாக ஒரு போட்டியில் ஆர்ஜென்டீன ஜெர்ஸியில் விளையாடவிருப்பது குறித்து...

32 வினாடிகள் முன்பு
லியோனல் மெஸ்ஸி - படம்: AFP
பகிர்:

சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தாலும் லியோனல் மெஸ்ஸி கடைசியாக ஒரு போட்டியில் ஆர்ஜென்டீனா அணியில் விளையாடவிருப்பது உறுதியாகியுள்ளது.

ஆர்ஜென்டீனா வரும் அக்.6ஆம் தேதி பெனின் உடனான நட்பு ரீதியான ஆட்டத்தில் விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி கடைசியாக ஒருமுறை விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் லியோ மெஸ்ஸி (39 வயது) இனிமேல் சர்வதேச போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்றும் இளைஞர்களுக்கு வழிவிடுவதாகவும் நேற்றிரவு (ஆக.31) இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.

Advertisement

Advertisement

ஆர்ஜென்டீன கால்பந்து அணிக்கு ஆக. 2005 முதல் ஆக.2026 வரை 21 ஆண்டுகள் விளையாடியுள்ளார். கடந்த 2022ல் உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். 2026 உலகக் கோப்பையிலும் இறுதிப் போட்டி வரைக்கும் முன்னேறிச்சென்று ஸ்பெயினிடம் 0-1 என அவரது தலைமையிலான ஆர்ஜென்டீனா தோல்வியுற்றது.

ஆர்ஜென்டீனாவிற்கு அதிக கோல்கள் (125) அடித்தவராக மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். திடீரென அவர் ஓய்வை அறிவித்ததால், பிரியாவிடை அளிக்கும் வாய்ப்பு அந்த அணிக்கு இல்லாமல் போய்விட்டது. இதனால், கடைசியாக ஓர் ஆட்டத்தில் விளையாட அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

39 வயதாகும் மெஸ்ஸி தற்போது எம்எல்எஸ் தொடரில் விளையாடி வருகிறார். ஆர்ஜென்டீனா நட்பு ரீதியான போட்டியில் அடுத்த சில மாதங்களுக்கு விளையாடவிருக்கிறது. அதன்படி அக்.6ஆம் தேதி நடைபெறும் போட்டியில் மெஸ்ஸி பங்கேற்கிறார்.

ஆர்ஜென்டீனா கால்பந்து கழகம், ஆர்ஜென்டீனாவின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி உடன் கலந்து பேசி உலகின் சிறந்த வீரர், எங்கள் அடையாளம், எங்கள் கேப்டனை மீண்டும் ஒருமுறை விளையாட முடிவெடுத்துள்ளோம். அவருக்கான பிரியாவிடையை அக்.6ஆம் தேதி அளிக்கவிருக்கிறோம்” எனக் கூறியுள்ளது.

summary

Lionel Messi added to Argentina's roster for Oct.6 friendly that team says will be farewell match

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments