30 மீ. நீளத்தில் மெஸ்ஸியின் ஜெர்ஸி..! சொந்த மண்ணில் கௌரவம்!
லியோனல் மெஸ்ஸியின் கடைசி சர்வதேச போட்டிக்கு சொந்த மண்ணில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஜெர்ஸி குறித்து...
லியோனல் மெஸ்ஸியின் கடைசி சர்வதேச போட்டிக்கு அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அவரது சொந்த மண்ணில் 30 மீட்டர் நீளத்தில் எண்.10 ஜெர்ஸி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜென்டீன அணியில் இருந்து ஓய்வை அறிவித்த மெஸ்ஸிக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இன்று தனது கடைசி சர்வதேச போட்டியில் மெஸ்ஸி விளையாடவிருக்கிறார்.
ஆர்ஜென்டீன அணிக்காக 207 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி 125 கோல்கள், 60 அசிஸ்ட்டுகளை செய்து அசத்தியுள்ளார். அவரது தலைமையில் ஆர்ஜென்டீன அணி 2022 உலகக் கோப்பை, 2021, 2024 கோபா அமெரிக்கா, 2022 ஃபைனலிஸ்மா ஆகிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் 0-1 என தோல்வியுற்றது. இதற்குப் பிறகு மெஸ்ஸி தனது ஓய்வை அறிவித்தார்.
ஆர்ஜென்டீனாவில் ரோசாரியோ என்ற ஊரில் பிறந்தவர் லியோனல் மெஸ்ஸி. அந்த மக்கள் தங்களது நன்றியை செலுத்தும் விதமாக ரோசாரியோவில் இருக்கும் தேசியக் கொடி நினைவிடத்தில் 30 மீட்டர் நீளத்துக்கு எண்.10 கொண்ட ஜெர்ஸியை ’கிராசியஸ் 10’ (நன்றி 10) எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
மெஸ்ஸிக்கு நன்றி செலுத்தும் விதமாக இவ்வாறு அந்த மக்கள் செய்துள்ளார்கள். பியூனஸ் அயர்ஸில் நடைபெறும் மெஸ்ஸி பங்கேற்கும் தனது கடைசி சர்வதேச போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது.
சமீபத்தில் மெஸ்ஸியை கௌரவிக்கும் விதமாக அவருக்கு பியூனோஸ் அயர்ஸ் பல்கலைக்கழகம் கௌர டாக்டர் பட்டம் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Rosario says thank you to Lionel Messi with giant No. 10 jersey
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.