FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சொந்த மண்ணில் நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து பதிலடி கொடுத்த இந்திய அணி!

சொந்த மண்ணில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்த நியூசிலாந்து அணியின் ஆதிக்கத்துக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

10 வினாடிகள் முன்பு
- படம் | பிசிசிஐ (எக்ஸ்)
பகிர்:

சொந்த மண்ணில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்த நியூசிலாந்து அணியின் ஆதிக்கத்துக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பே ஓவலில் இன்று (நவம்பர் 15) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement

Advertisement

நியூசிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒருமுறை கூட ஒருநாள் தொடரில் தோற்றதில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரை சொந்த மண்ணில் 11 ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, அனைத்துத் தொடர்களிலும் வென்று ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நியூசிலாந்து அணி கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்திருந்தது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியால் சொந்த மண்ணில் நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று 12 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் தொடர்ந்த இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் ஆதிக்கத்துக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Indian team has put an end to New Zealand's dominance on home soil, which had lasted for the past 7 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.