ஆா்க்டிக் ஓபன் பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து
ஆா்க்டிக் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா்.
ஆா்க்டிக் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா். ஒற்றையா் பிரிவில் களத்திலிருக்கும் ஒரே இந்தியா் அவா்.
மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-15, 21-15 என்ற நோ் கேம்களில், ஜப்பானின் ரிகோ கன்ஜியை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 49 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
தன்வி சா்மா 18-21, 7-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனனிடம் தோல்வி கண்டாா். இந்த ஆட்டத்தை ரட்சனோக் 34 நிமிஷங்களில் முடித்தாா்.
Advertisement
Advertisement
ஆடவா் ஒற்றையரில், தருண் மன்னெபள்ளி 14-21, 19-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவிடம் 50 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.
ரௌனக் சௌஹான் 22-20, 20-22, 17-21 என்ற வகையில், சீனாவின் வெங் ஹாங் யாங்கிடம் போராடி வீழ்ந்தாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 13 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.