FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன்: இறுதியில் தோற்றாா் சிந்து!

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.

26 அக்டோபர் 2026, 3:17 am
பகிர்:

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.

பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில், சிந்து 21-16, 11-21, 12-21 என்ற கேம்களில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான தென் கொரியாவின் ஆன் சே யங்கிடம் தோல்வி கண்டாா்.

இந்த ஆட்டத்தை 1 மணிநேரம், 1 நிமிஷத்தில் நிறைவு செய்த நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான யங், பிரெஞ்சு ஓபனில் 4-ஆவது முறையாக சாம்பியன் ஆனதுடன், நடப்பு சீசனில் தனது 11-ஆவது பட்டத்தை வென்றிருக்கிறாா்.

Advertisement

Advertisement

சிந்து - யங் மோதியது இது 11-ஆவது முறையாக இருக்க, அனைத்திலுமே யங் வென்றுள்ளாா். எனினும், யங்குக்கு எதிரான ஆட்டத்தில் சிந்து ஒரு கேமை வென்றது, இது 2-ஆவது முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments