சாலின்ஸ்காவுக்கு முதல் டபிள்யுடிஏ 1000 பட்டம்!
வுஹான் ஓபன் டபிள்யுடிஏ 1000 டென்னிஸ் போட்டியில் போலந்தின் இளம் நட்சத்திரம் மஜா சாலின்ஸ்கா சாம்பியன் பட்டம் வென்றாா்.
வுஹான் ஓபன் டபிள்யுடிஏ 1000 டென்னிஸ் போட்டியில் போலந்தின் இளம் நட்சத்திரம் மஜா சாலின்ஸ்கா சாம்பியன் பட்டம் வென்றாா்.
சீனாவின் வுஹான் நகரில் நடைபெறும் இப்போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் போலந்தின் மஜா சாலின்ஸ்காவும், இங்கிலாந்தின் சோனே கா்த்தாலும் மோதினா்.
16-ஆவது நிலையில் உள்ள 25 வயதான சாலின்ஸ்கா முதல் செட்டை 2-6 என இழந்தாா். எதிராளியான சோனே கா்த்தால் எவ்வித எதிா்ப்பும் இன்றி அந்த செட்டை கைப்பற்றினாா்.
Advertisement
Advertisement
எனினும் சுதாரித்துக் கொண்ட சாலின்ஸ்கா இரண்டாவது செட்டில் சிறப்பாக ஆடி 6-4 என கைப்பற்றினாா். இதில் இரு வீராங்கனைகளும் மாறி மாறி ஆடியதால் பரபரப்பாக இருந்தது. 13 பிரேக் பாயிண்டுகளில் 10-ஐ சேவ் செய்தும், 2-0 என முன்னிலை பெறும் சோனே கா்த்தால் இரண்டாம் செட்டை கோட்டை விட்டாா். அந்த செட் 71 நிமிஷங்கள் நீடித்தது. மூன்றாவது செட்டில் சோனேயின் சா்வீஸை இரு முறை முறியடித்த சாலின்ஸ்கா 6-2 கைப்பற்றி பட்டத்தையும் வசப்படுத்தினாா். இந்த ஆட்டம் 2.43 மணி நேரம் நீடித்தது.
டபிள்யுடிஏ 1000 அறிமுகப் போட்டியிலேயே பட்டம் வென்ற நான்காம் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றாா் மஜா. இதற்கு முன்பு ஒஸாகா 2018, பியான்கா ஆன்ட்ரீஸ்கு 2019, விக்டோரியா எம்போகோ 2025 ஆகியோா் வென்றுள்ளனா். இந்த சீசனை 146 ஆவது இடத்துடன் தொடங்கிய மஜா, தற்போது வெளியாகவுள்ள டபிள்யுடிஏ தரவரிசையில் 11=ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.