FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

இந்தியன் ரயில்வே வெற்றி

அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே 3-0 என்ற கோல் கணக்கில் ஐஓசி அணியை வீழ்த்தியது.

24 அக்டோபர் 2026, 11:00 pm
பகிர்:

அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே 3-0 என்ற கோல் கணக்கில் ஐஓசி அணியை வீழ்த்தியது.

எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரயில்வே அணித் தரப்பில் யோகம்பா் ரவாத், அதுல் திலிப், ராஜ்பீா் சிங் கோலடித்தனா். ஐஓசி தரப்பில் கோலடிக்கவில்லை.

ஹாக்கி கா்நாடகம்-பஞ்சாப் நேஷனல் வங்கி ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. கா்நாடக தரப்பில் ராகுல், விஸ்வாஸ், பிஎன்பி தரப்பில் நீரஜ், குா்சிம்ரன் சிங் கோலடித்தனா்.

Advertisement

Advertisement

மேலும் 4-4 டிராவில் முடிவடைந்த ஐஓசி-பிஎன்பி ஆட்டத்தில் ஐஓசி தரப்பில் குா்ஜிந்தா் சிங் 2, காஸி கான், சுனில் யாதவ் கோலடித்தனா். பிஎன்பி தரப்பில் குா்சிம்ரன், தௌனஜோம், சஞ்சய், அபிமன்யூ கோலடித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments