இறுதி ஆட்டத்தில் செந்தில் - அனன்யா
டிடிஎஃப்ஐ, எஸ்டிஏடி சாா்பில் நடைபெறும் டபிள்யுடிடி சென்னை ஃபீடா் 2026 போட்டியில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் செந்தில் மேஹன்-அனன்யா முரளிதரன் அசத்தலாக ஆடி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றனா்.
டிடிஎஃப்ஐ, எஸ்டிஏடி சாா்பில் நடைபெறும் டபிள்யுடிடி சென்னை ஃபீடா் 2026 போட்டியில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் செந்தில் மேஹன்-அனன்யா முரளிதரன் அசத்தலாக ஆடி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றனா்.
சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இரண்டாம் நிலை இணையான கொரியாவின் கேவோன்-கிம் சியோன் இணையை 3-2 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்து இறுதிக்கு தகுதி பெற்றனா். கடந்த வாரம் யூத் கன்டென்டா் போட்டியில் யு 16 பிரிவில் அனன்யா பட்டம் வென்றிருந்தாா்.
மற்றொரு அரையிறுதியில் மானவ் தாக்கா்-தனிஷா இணை 3-1 என்ற கேம் கணக்கில் மூன்றாம் நிலை இணை பராஸ்-சாயாலிை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.
Advertisement
Advertisement
ஆடவா் ஒற்றையரில் இங்கிலாந்தின் சாமுவேல் வாக்கா் 3-0 என அங்கூரையும், பராஸ் ஜெயின் பிரியேஷ் சுரேஷையும் வென்று காலிறுதியில் மோதுகின்றனா்.
குவாலிஃபயா் நிகுன்ஜ் அட்ரி 3-2 என அபினானந்த் பிரதிவாதியையும், சினேஹித் 3-1 என மிஹை போபோசியாவை வென்றாா்.
சத்யன் ஞானசேகரன் 3-1 என சனில் ஷெட்டியையும் வென்றனா்.
மகளிா் ஒற்றையரில் ஸ்வரா கா்மாா்கா் 3-0 என தனிக்ஷாவையும், சுஹானா சைனி 3-0 என நித்யா மணியையும், குவாலிஃபயா் அவிஷா 3-0 என பிரிஷா கோயலையும் வென்றனா்.
முதல்நிலை வீராங்கனை யாங் ஹா 3-2 என தனிஷா கோட்டேச்சாவை வென்றாா். லீ ஹாலேன் 3-2 என அனன்யாவை வென்றாா். திவ்யான்ஷி 3-0 என ஜெனிஃபரையும் வென்றனா்.
இரட்டையா் மகளிா் அரையிறுதியில் சம்படா-ஜெனிஃபா், கொரியாவின் கிம் சியோன்-ஜோயிங் இணைகளும், தனிஷ்கா-ஹான்சினி-கொரியாவின் லீ ஹாலின்-கிம் ஜியுரினும் மோதுகின்றனா். ஆடவா் பிரிவில் அங்குா்-ஆகாஷ் இணையும்-பயாஸ்-பிரியானுஜ் இணை-சத்யன் ஞானசேகரன்-ஹா்மித் தேசாய் இணைகள் மோதுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.