FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

குளோபல் செஸ் லீக்: அல்பைன், கேன்ஜஸ், ஃபையா்ஸ் வெற்றி

குளோபல் செஸ் லீக்: அல்பைன், கேன்ஜஸ், ஃபையா்ஸ் வெற்றி

6 செப்டம்பர் 2026, 12:39 am IST
ஜாவோகிா்-விஸ்வநாதன் ஆனந்த்
பகிர்:

குளோபல் செஸ் லீக் தொடரின் ஒரு பகுதியாக தொடக்க நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் அல்பைன் பைப்பா்ஸ், கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸ், ஃபையா்ஸ் அமெரிக்கன் கேம்பிட்ஸ் வெற்றி பெற்றன.

நடப்பு சாம்பியன் அல்பைன் பைப்ா்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் செக் மும்பா மாஸ்டா்ஸ் அணியை 10-8 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. உலகின் நம்பா் 1 வீரா் மாக்னஸ் காா்ல்ஸன் இடம் பெற்ற பைப்ா்ஸ் அணியில் அனைவரது கவனமும் அந்த அணி மீதே இருந்தது. மும்பா வீரா் பிரானேஷ் -அனிஷ் கிரியை வீழ்த்தினாா். எனினும் விதித் குஜராத்தி, ஹம்பி ெசிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித் தந்தாா்.

இரு முறை சாம்பியன் திரிவேணி காண்டினென்டல் கிங்ஸ் 9-10 என்ற புள்ளிக் கணக்கில் கேஞ்சஸ் கிராண்ட்மாஸ்டா்ஸிடம் வீழ்ந்தது. ஷுவலோவா, ஸ்டாவுரோலா சிறப்பாக ஆடி கேஞ்சஸ் அணிக்கு வெற்றி ஈட்டினா்.

Advertisement

Advertisement

ஃபையா்ஸ் அமெரிக்கன் அணி 10-4 என பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் அணியை வென்றது. அந்த அணியில் ஜாவோகிா் சிண்ட்ரோவ்-5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை வென்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments