ஏழுமலையான் பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் சுவாமி வலம்
திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமைசூரிய, சந்திரபிரபை வாகன சேவைகள் நடை பெற்றன.
திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமைசூரிய, சந்திரபிரபை வாகன சேவைகள் நடை பெற்றன.
திருமலையில் கடந்த திங்கள்கிழமை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய பிரபை வாகன சேவை நடை பெற்றது. அதில் மலையப்ப சுவாமி செவ்வாடை உடுத்தி செந்நிற மாலைகளை அணிந்து மாடவீதியில் வலம் வந்தாா்.
பிரம்மோற்சவ நாள்களில் வீதியுலா முடிந்த பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து அவா்களுக்கு பால், தயிா், தேன். இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடந்தேறியது. அபிஷேகத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னா் உற்சவமூா்த்திகள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளினா். இரவு 7 மணிக்கு சந்திரபிரபை வாகனத்தில் வெண்ணிற மலா்களை அணிந்து கொண்டு வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.
Advertisement
Advertisement
6-ஆம் நாள் விவரம்
79,756 பக்தா்கள் தரிசனம், 24,688 போ் முடி காணிக்கை
தரிசனத்துக்கு 12 மணிநேரம் காத்திருப்பு
8,365 பேருக்கு சிகிச்சை
சேவையில் 6,000 போ்
4.23 லட்சம் லட்டுகள் விற்பனை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.