திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்குவது குறித்து...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு புதன்கிழமை (அக். 7) தொடங்குகிறது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக். 11 ஆம் தேதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கான அங்குரார்ப்பணமும், அக். 12-ல் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, அக். 16-ல் பிரம்மோற்சவ கருட சேவை நடைபெறுகிறது.
தொடர்ந்து, அக். 20-- நவராத்திரி பிரம்மோற்சவத்தின் சக்கர ஸ்நானம் மற்றும் வேதாந்த தேசிகர் சாற்றுமுறை, அக். 21-ல் பூதத்தாழ்வார் வருட திருநட்சத்திரம், அக். 26-ல் பௌர்ணமி கருட சேவையும் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு (ரூ. 300), ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் புதன்கிழமையில் தொடங்குகிறது. இந்த இணையதளத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக். 12, 13, 14, 18, 19, 20 ஆகிய தேதிகளுக்கான சிறப்பு தரிசனத்துக்கான நுழைவுக்காக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
Tirupati Navaratri Brahmotsavam: Advance booking for special darshan begins tomorrow
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.