முகப்பு

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்!

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்க இருப்பது பற்றி...

21 நவம்பர் 2026, 7:08 pm
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்!
திருப்பதி ஏழுமலையான் கோயில்.
பகிர்:

நவம்பர் 26-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கவுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்க முன்வந்துள்ளார்.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் சனிக்கிழமை பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "நவம்பர் 26-ஆம் தேதி திருமலையில் உள்ள ஏழுமலையானுக்குப் பக்தர் ஒருவர் 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கவுள்ளார்.

Advertisement

Advertisement

ஒன்பது தொகுப்புகளாக வடிவமைக்கப்பட்ட 45 ஆபரணங்களைக் கொண்ட இதன் மதிப்பு ரூ.150 கோடி முதல் ரூ.160 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இதுதொடர்பான ஆலோசனைகளை நிறைவு செய்துவிட்டதாகவும், கோயிலில் உள்ள தேவஸ்தான நிர்வாகத்திடம் இந்த ஆபரணங்களை ஒப்படைப்பார் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

திருமலையில் உள்ள ஏழுமலையானுக்குத் தனிநபர் ஒருவர் வழங்கும் மிகப்பெரிய காணிக்கை இதுவாகவே இருக்கும் என தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

summary

A devotee has come forward to donate 121 kg of gold ornaments valued at around Rs 160 crore to Tirupati Lord Venkateswara temple, and the donation is touted to be the largest ever individual donation to the globally famous hill shrine, government and TTD sources said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.