பிரீமியர் லீக்: சமீபத்தில் தகுதிபெற்ற ஹல் சிட்டி தோல்வியே சந்திக்காமல் 2ஆவது இடத்துக்கு முன்னேற்றம்!
பிரீமியர் லீக்கில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ள ஹல் சிட்டி குறித்து...
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் ஹல் சிட்டி இரண்டாமிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பீரிமியர் லீக்கிற்கு தகுதிப்பெற்றுள்ள இந்த அணி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் முதல்தர கால்பந்து போட்டியான பிரீமியர் லீக்கில் விளையாட வேண்டுமென்பதே பல கிளப் அணிகளின் முதன்மையாக குறிக்கோளாக இருக்கிறது.
நேற்றைய பிரீமியர் லீக் ஆட்டத்தில் ஹல் சிட்டி அணியும் ஆஸ்டன் வில்லா அணியும் மோதின. இந்தப் போட்டி 0-0 என சமனில் முடிவடைந்தது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ஆஸ்டன் வில்லா 76 சதவிகித நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் ஹல் சிட்டி அணியில் தடுப்பாட்டத்தை தாண்டி ஒரு கோல்கூட அடிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் ஹல் சிட்டி 5-4-1 என்ற லைன் அப்பில் சிறப்பாக விளையாடினார்கள். ஆஸ்டன் வில்லாவை 2 முறை மட்டுமே இலக்கை நோக்கி அடிக்க, ஹல் சிட்டி 4 முறை இலக்கை நோக்கி அடித்து ஆச்சரியத்தை அளித்தது.
இந்தப் போட்டி சமனில் முடிந்தாலும் ஹல் சிட்டி இரண்டு வெற்றிகள், ஒரு டிரா உடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. 270 நிமிஷங்களாக கோல் விட்டுக்கொடுக்காமல் ஹல் சிட்டி அசத்தியுள்ளார்கள்
Hull City, recently promoted to the Premier League, moves up to second place!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.